கிரிக்கெட்

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி மாற்றப்பட்டது ஏன் ? பிளமிங் விளக்கம்

சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டனாக இருந்த தோனி மாற்றப்பட்டு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் , கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி மாற்றப்பட்டது ஏன்? என சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சென்னை அணியின் எதிர்காலத்தை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம்.ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.தோனி முழு சீசனிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். இந்த சீசனில் தோனியின் உடல்தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது. என கூறினார். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்