கிரிக்கெட்

சென்னை அணியின் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றமா?

சென்னை அணியின் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தொடக்கப் போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், தேர்தல் காரணமாக சென்னை அணியின் (ஹோம்) போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது.

இது தொடர்பாக சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறியதாவது,

தேர்தல் காரணமாக சென்னைஅணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என்பது உண்மையல்ல. அப்படி எந்த வழிகாட்டுதலையும் ஐபிஎல் நிர்வாகம் எங்களுக்கு கொடுக்கவில்லை. என தெரிவித்தார்.