சென்னை,
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் டெல்லியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் சேப்பாக்கத்தில் 15ம் தேதி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் கொல்கத்தா வீரர் மதீஷா பதிரனா சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவர் முதற்கட்ட போட்டிகளில் விளையாடவில்லை .
மதீஷா பதிரனா கடந்த ஆண்டு வரை சென்னை அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.