கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தினத்தந்தி

பிரிஸ்பேன்,

பிரிஸ்பேனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, வெஸ்ட்இண்டீசை எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிகா பாண்டே 24 ரன் எடுத்தார். பின்னர் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பூனம் யாதவ் வீசினார். அவர் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அடிலெய்டில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை எளிதில் தோற்கடித்தது. இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை