Image Courtesy; @ICC twitter 
கிரிக்கெட்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்!!

பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினத்தந்தி

வெலிங்டன்,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பர்கார் ஹூக் 71 ரன்களும், அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா 46 ரன்களும், தொடக்க வீராங்கனை ஷர்மீன் அக்தர் 44 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நஸ்ரா சந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை சித்ரா அமீன் சதமடித்து அசத்தினார். எனினும் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம், வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பஹிமா காட்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு