Image Courtesy: @ACCMedia1 / @BCCIWomen 
கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதல்

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

தம்புல்லா,

9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியாவும், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன.

7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் ஏற்கனவே இறுதி சுற்றில் 5 முறை இந்தியாவிடம் தோல்வி கண்டுள்ள இலங்கை அணி முதல்முறையாக ஆசிய கோப்பை பட்டம் வெல்ல கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்