கிரிக்கெட்

பெண்கள் ஆசிய கோப்பை டி20: இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன்

பெண்கள் ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. #IndVsBan

தினத்தந்தி

கோலாலம்பூர்,

வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

6 அணிகள் இடையிலான 7-வது பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி, 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலில் 'பேட்' செய்த மிதாலி ராஜ் (11), மந்தனா (7), தீப்தி சர்மா (4) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆயினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 56(42) ரன்கள் எடுத்து ஓரளவு நம்பிக்கை தந்தார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்தது.

113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில், அயாஷா ரஹ்மான் (17), ஷமிமா சுல்தானா (16) ரன்கள் எடுத்தனர். நிகார் சுல்தானா (27) ரன்களும், ருமானா அஹமது (23) ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில் வங்கதேச அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்கதேச அணி முதன்முறையாக ஆசிய கோப்பை வென்றது. இதன்மூலம் தொடர்ந்து 6 முறை கோப்பை வென்றிருந்த இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு