கிரிக்கெட்

பெண்கள் முத்தரப்பு கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்ரேலியாவில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

மெல்போர்ன்,

இதில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதிக் கொண்டன. லீக் சுற்று முடிவில் மூன்று அணிகளும் தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலை வகித்தன. ரன்-ரேட் அடிப்படையில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் கோப்பை யாருக்கும் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி, மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவை மெல்போர்னில இன்று எதிர்கொள்கிறது.

இந்திய அணி கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதுவும் 174 ரன்கள் இலக்கை சேசிங் செய்து சாதனை படைத்தது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மாவும் (49 ரன்) மந்தனாவும் (55 ரன்) சிறப்பாக ஆடினர். இந்த வெற்றியால் இந்திய வீராங்கனைகள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். அதே சமயம் சொந்த ஊரில் மகுடம் சூடுவதற்கு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறையிருக்காது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8.10 மணிக்கு தொடங்குகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு