Image Courtesy: @ICC  
கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

தினத்தந்தி

மும்பை,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கு பின் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிகளுக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும் , ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிஹஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா ஹோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயன்கா படீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேனுகா சிங் தாக்கூர், டைட்டஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், ஸ்னே ரானா. ஹார்லீன் தியோல்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி;

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிஹஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா ஹோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயன்கா படீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேனுகா சிங் தாக்கூர், டைட்டஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அகுஜா, மின்னு மணி.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்