கிரிக்கெட்

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் மிதாலிராஜ்

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிதாலிராஜ் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.

துபாய்,

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் (738 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அவர் வெறும் 87 ரன்கள் எடுத்ததால் இரு இடத்தை இழந்துள்ளார். தென்ஆப்பிரிக்க வீராங்கனை லிசெல் லீ (761 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி (750 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை தனதாக்கினார். இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா (710 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தை பெற்றுள்ளார்.

பவுலிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸ் ஜோனசன் (760 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய மூத்த வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி (727 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்