Image Courtesy: @windiescricket 
கிரிக்கெட்

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 141 ரன்கள் எடுத்தார்.

தினத்தந்தி

கராச்சி,

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் 2 போட்டிகள் முடிவில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 141 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 190 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 88 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முனீபா அலி 38 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹேலி மேத்யூஸ், ஆலியா அலீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு