கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி

குஜராத் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது..

தினத்தந்தி

வதோதரா,

5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.)டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது.இதில் நேற்றிரவு நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இதன்படி முதலில் ஆடிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. பெத் மூனி (58 ரன்), அனுஷ்கா ஷர்மா (39 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. டெல்லி தரப்பில் ஸ்ரீசரனி 4 விக்கெட்டும், சினெலி ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.பின்னர் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 171 ரன்களே எடுத்தது. இதனால் குஜராத் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.. அதிகபட்சமாக நிக்கி பிரசாத் 47 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சோபி டிவைன் 4 விக்கெட்டும், ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்