கிரிக்கெட்

பெண்கள் பிரிமீயர் லீக்: மைதானத்தில் நடனமாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்...வைரலாகும் வீடியோ...!

பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி-பெங்களூரு அணிகள் மோதின்.

தினத்தந்தி

மும்பை,

ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் போலவே பெண்களுக்கான ஐபிஎல் (டபிள்யூ.பி.எல்) தொடர் இந்த ஆண்டு அறிமுகயாகி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் மும்பை அணி குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி-பெங்களூரு அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி பெங்களூரின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 163 ரன்களே எடுத்தது. இதன் மூலம் டெல்லி 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு பேட்டிங் ஆடிய போது பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நடனமாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்