கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்த வருடம் நடைபெற்ற 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன.

அந்த வகையில் நடப்பு சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த சீசனுக்கு முன்னதாக தங்களது புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை லிசா கீட்லியை நியமித்துள்ளது.

ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த சார்லோட் எட்வர்ட்ஸ் இங்கிலாந்து மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளது. சார்லோட் எட்வர்ட்சின் பயிற்சியின் கீழ்தான் மும்பை 2 கோப்பைகளை (2023 & 2025) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து