கிரிக்கெட்

மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள்; 3 அணிக்கான கேப்டன்களை அறிவித்தது பி.சி.சி.ஐ.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் 3 அணிகளின் கேப்டன்களை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 19ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து வருகிற நவம்பர் 4ந்தேதி முதல் 9ந்தேதி வரை 3 அணிகள் கலந்து கொள்ளும் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக சூப்பர்நோவா, டிரெயில்பிளேசர்ஸ் மற்றும் வெலாசிட்டி ஆகிய 3 மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த அணிகளுக்கான கேப்டன்களாக முறையே ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்