கிரிக்கெட்

பெண்கள் டி20 கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் அணிக்கு 119 ரன்கள் வெற்றி இலக்கு

பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில், டிரைபிளாசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சார்ஜா,

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வரும் 3-வது சேலஞ்சர்ஸ் பெண்கள் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

இதில் லீக் சுற்றுகளின் முடிவில் ஸ்மித்ரி மந்தானா தலைமையிலான டிரைபிளாசர் அணியும், ஹர்மன் பிரீத் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இன்று நடைபெறும் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதின.

இதில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டிரைபிளாசர்ஸ் அணியின் சார்பில் டோட்டின் மற்றும் மந்தனா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான துவக்கத்தை தந்த இந்த ஜோடியில் டோட்டின் 20(32) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தினை பதிவு செய்தநிலையில் 68(49) ரன்களில் வெளியேறினார்,

அடுத்து களமிறங்கிய தீப்தி சர்மா 9(10) ரன்களும், ரிச்சா கோஷ் 10(16) ரன்களும், ஹர்லி தியோல் 4(8) ரன்களும், எக்சலஸ்டோன் 1(2) ரன்னும், கோஸ்வாமி 1(3) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

முடிவில் டிரைபிளாசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. சூப்பர் நோவாஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 5 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் மற்றும் ஸ்ரீவர்தனே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டிரைபிளாசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ் அணிக்கு 119 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்