Image Courtesy:@T20WorldCup  
கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

தினத்தந்தி

துபாய்,

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்றிரவு நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது. அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா தனது தொடக்க ஆட்டத்தில் இலங்கையையும், சோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவையும் வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து