கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது.

ஓவல்,

மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.

இறுதிப்போட்டிக்கு தகுதி

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா

வரும் 5ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது .