கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

லண்டன்,

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்றைய 20-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பை

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) 3 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றநிலையில், இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

டாஸ்

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.