Image Courtesy : @englandcricket 
கிரிக்கெட்

பெண்கள் உலகக்கோப்பை : 3-வது அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

வங்காளதேச அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தினத்தந்தி

வெலிங்டன்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் இங்கிலாந்து -வங்காளதேச அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோபியா டங்லீ 67 ரன்கள் குவித்தார்.

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக லதா மோண்டல் 30 ரன்கள் குவித்தார்.

மற்ற வீராங்கனைகள் சோபிக்காத நிலையில் அந்த அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3-வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை