கிரிக்கெட்

பெண்கள் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியுற்று அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா

வெற்றிக்காக கடைசி வரை போராடிய இந்திய அணி தோல்வியை தழுவியதால், அரையிறுதி செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

தினத்தந்தி

கிரிஸ்ட்சர்ச்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது பரபரப்பரான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது..

ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், அரை இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார். அவர் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது பங்கிற்கு 68 ரன்கள் குவித்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கணை லாவ்ரா 80 ரன்கள் குவித்து அசத்தினார். மிக்னன் டு ப்ரீஸ் கடைசி வரைசி களத்தில் நின்று 52 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒருபுறம் ரன்கள் சேர்ந்தாலும், மறுபுறம் சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. ஆட்டத்தில் கடைசி பந்து வரை பரபரப்பு நிலவியது. தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி இரு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நேர்த்தியாக இரு பந்துகளிலும் நேர்த்தியாக தலா ஒரு ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனால் வெற்றிக்காக கடைசி வரை போராடிய இந்திய அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதன் மூலம் உலகக்கோப்பையில் அரையிறுதி செல்லும் வாய்ப்பையும் இழந்தது. இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்