Image Courtesy : AFP 
கிரிக்கெட்

டெல்லி அணியின் அடுத்த போட்டியில் வார்னரை தேர்வு செய்யமாட்டேன்- பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னரை தேர்வு செய்யமாட்டேன் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னரை தங்கள் அணியில் ஏலம் எடுத்தது.

பாகிஸ்தான் தொடரில் தேசிய அணிக்காக விளையாடி வந்ததால் டெல்லி அணியின் போட்டிகளில் வார்னர் தற்போது வரை விளையாடவில்லை. தற்போது இந்தியா திரும்பியுள்ள அவர் லக்னோ அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் தன்னுடைய அணியில் டேவிட் வார்னரை தேர்வு செய்யமாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் " லக்னோ அணிக்கு எதிரான டெல்லியின் அடுத்த போட்டியில் நான் டேவிட் வார்னரை தேர்வு செய்யமாட்டேன். ஏனெனில் லக்னோ அணியில் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இதனால் நான் அவருக்கு எதிராக அதிக வலதுகை பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை விரும்புவேன். அதனால் வார்னருக்கு பதில் அணியில் டிம் செவேர்ட்டை தேர்வு செய்வேன் " என தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து