கிரிக்கெட்

'உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க மாட்டேன்': தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பேட்டி

சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவது பொருத்தமானதாக இருக்கும் என ராப் வால்டர் கூறினார்.

தினத்தந்தி

கொல்கத்தா, 

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா இழந்தது. இதனால் 5-வது முறையாக நாக் அவுட் சுற்றுடன் அந்த அணி வெளியேறியது.

இந்த நிலையில், ஆட்டம் முடிவடைந்ததும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறுகையில், "உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க மாட்டேன். இறுதிப்போட்டி குறித்து எனக்கு கவலை இல்லை. இருப்பினும், சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவது பொருத்தமானதாக இருக்கும். சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆஸ்திரேலியாவும் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட அணிதான்" இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்