கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றம்: இலங்கை கேப்டன் கூறியது என்ன ?

இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

கொழும்பு,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 8 சுற்றில் (குரூப்2) கொழும்பு பிரே மதாசா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, நியூசிலாந்தை எதிர்கொண் டது. 'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் செய்பெர்ட் 8 ரன்னிலும், பின் ஆலென் 23 ரன்னிலும் கேட்ச் ஆனார் கள். அணியின் சரிவை தடுத்த கிளென் பிலிப்ஸ் (18 ரன்) ரச்சின் ரவீந் திரா (32 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர்.

இந்த சூழலில் கேப்டன் மிட்செல் சான்ட்னெரும், கோல் மெக்கோன்சியும்அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். இதனால் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட எகிறியது. கடைசி பந்தில் சான்ட்னெர் 47 ரன்களில் (26 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். மெக்கோன்சி 31 ரன்னுடன் (23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் தீக்ஷனா, சமீரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 169 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள எடுத்தது. அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 31 ரன் எடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இது தொடர்பாக இலங்கை கேப்டன் தசுன் ஷானகா கூறியதாவது,

ஆமாம், உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றியது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், மிட்செல் சாண்ட்னர் சிறப்பாக விளையாடினார். அந்த பார்ட்னர்ஷிப், ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்தது. இது ஒரு புதிய பிட்ச் என்பதால் விக்கெட் இவ்வளவு திரும்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் அவர்களை 130 ரன்களுக்குள் கட்டுப்படுத்த விரும்பினோம், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு நாம் பெருமை சேர்க்க வேண்டும், அவர்கள் இன்றிரவு சிறப்பாக செயல்பட்டார்கள் . என தெரிவித்தார்.