மான்செஸ்டர்
நேற்று மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி, நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது. நேற்று 46.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இன்று தொடர்ந்த ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 240 ரன்கள இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி பேட்டிங் செய்தனர். முக்கிய வீரர்கள் ரோகித் சர்மா, வீராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் ஒரு ரன்னில் அவுட் ஆனார்கள். இந்தியா 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து உள்ளது.