கிரிக்கெட்

உலக கோப்பை அணியில் ரிஷாப் பான்டை சேர்க்காதது ஆச்சரியம் அளித்தது பாண்டிங் சொல்கிறார்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்டை சேர்க்காதது எனக்கு ஆச்சரியம் அளித்தது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்டை சேர்க்காதது எனக்கு ஆச்சரியம் அளித்தது. அவர் நிச்சயம் அணியில் இருப்பார், அதுவும் களம் காணும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என்று நினைத்தேன். அவரை போன்ற வீரரால் 4 அல்லது 5வது பேட்டிங் வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதே சமயம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவானது என்பதை அறிவேன். அதனால் தான் இந்த முறை அவர் தேர்வு செய்யப்படவில்லை. திறமைசாலியான ரிஷாப் பான்ட், தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்வதற்கு முன்பு குறைந்தது 3 உலக கோப்பை தொடரிலாவது ஆடாவிட்டால் அது எனக்கு வியப்புக்குரிய விஷயமாக இருக்கும்.

இவ்வாறு பாண்டிங் கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை