image courtesy; ICC 
கிரிக்கெட்

உலகக்கோப்பை; கனவு 11 அணியில் நான் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள்தான் - வீரேந்திர சேவாக்

உலகக்கோப்பை தொடருக்கான தனது கனவு 11 அணியில் இடம்பிடித்த முதல் 5 வீரர்களை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் வெளிப்படுத்தியுள்ளார்.

தினத்தந்தி

புது டெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் உலகக்கோப்பை தொடருக்கான தனது கனவு 11 அணியின் முதல் 5 வீரர்களை வெளிப்படுத்தியுள்ளார். அதில் 3 இந்திய வீரர்கள், ஒரு ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஒரு நியூசிலாந்து வீரர்  இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி சேவாக் தேர்வு செய்த முதல் 5 வீரர்களின் விவரம்;-

முதல் வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார்.

2-வது வீரராக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலியை தேர்வு செய்துள்ளார்.

3-வது வீரராக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார்.

4-வது வீரராக நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிளென் பிலிப்சை தேர்வு செய்துள்ளார்.

5-வது வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடித்துள்ளார்.

தான் தேர்வு செய்தவர்கள் அனைவரும் திறமையான வீரர்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார்கள். மேலும் அவர்களால் தனி ஒரு வீரராக போட்டிகளை வெல்ல முடியும் என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார். 

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்