Image Courtesy: @ICC 
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: கோப்பையை வெளியிட்ட ரிக்கி பாண்டிங்...!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை (டெஸ்ட் மேஸ்) ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.

துபாய்,

இந்தியாவில் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற அணிகள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடுகிறது.

அடுத்த மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

அதுமட்டுமின்றி 2013க்கு பின்னர் எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்த அணி அந்த நீண்ட கால சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை (டெஸ்ட் மேஸ்) ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு