கிரிக்கெட்

உ.பி.வாரியர்ஸ் அணியின் துணைகேப்டனாக தீப்தி ஷர்மா நியமனம்

உ.பி.வாரியர்ஸ் அணியின் துணை கேப்டனாக ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா நேற்று நியமிக்கப்பட்டார்.

லக்னோ,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த அணியின் துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா நேற்று நியமிக்கப்பட்டார். 25 வயதான தீப்தி ஷர்மா ரூ.2.60 கோடிக்கு வாங்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'கேப்டன் அலிசா ஹீலி மற்றும் சீனியர் வீராங்கனைகளுடன் இணைந்து உ.பி.வாரியர்ஸ் சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருப்பேன்' என்று தீப்தி ஷர்மா தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்