கிரிக்கெட்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் விருத்திமான் சஹா

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் சாஹாவும் இடம் பெற்றுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரானது, வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார்.

இதனை தொடர்ந்து கொரோனா சிகிச்சை முடிந்து விருத்திமான் சஹா வீடு திரும்பியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் சாஹாவும் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் விருத்திமான் சஹா வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு