கிரிக்கெட்

மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு எம்.எஸ்.டோனி - ஹர்பஜன்சிங் புகழாரம்

மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு எம்.எஸ்.டோனி என்று ஹர்பஜன்சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை, 

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டோனி கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 9 பந்துகளில் 2 சிக்சர் 1 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்த கடைசி ஓவரில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில், சென்னை அணி பேப்டன் எம்.எஸ்.டோனி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அந்த பதிவில் "எத்தனை அரசர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட. எப்படிப்பட்ட அரசன் இருக்கிறார் என்பதே முக்கியம். மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு எம்.எஸ்.டோனி முன் டெல்லி கேப்பிட்டல்ஸ் மட்டும் தப்ப முடியுமா. வெற்றியை தேடுபவர்களுக்கு மத்தியில்.,வெற்றிக்கு விலாசம் கொடுத்த #மாமன்னன் மஹி!" என்று தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு