கிரிக்கெட் வீரர யூசுப் பதான் கடந்த ஆண்டு போட்டியில் டர்புடலினின் தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்தது . இதை தொடர்ந்து சமீபத்திய ரஞ்சி டிராபியில் விளையாட யூசுப் பதானை பரோடா மாநில கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்ய வேண்டாம் என
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சமீபத்தில் கேட்டு கொண்டது.
இருமல் மருந்தில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் இருந்ததால் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் 5 மாதம் சஸ்பெண்ட். சஸ்பெண்ட் காலம் கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. என பிசிசிஐ கூறி இருந்தது.
பதான் மீதான இந்த தடை ஜனவரி 14 ந்தேதி வரை உள்ளது.
இந்த நிலையில் ஊக்கமருந்து விவகாரத்தில் என்மீதான புகாரை நியாயபடுத்த எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐக்கு நன்றி தெரிவிப்பதாக யூசுப் பதான் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
#yusufpathan | #BBCI |#CricketNews