கிரிக்கெட்

எங்களது இதயத்தில் இருந்து தெண்டுல்கருக்கு ஓய்வே கிடையாது யுவராஜ்சிங் புகழாரம்

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று 7 ஆண்டு நிறைவு: எங்களது இதயத்தில் இருந்து தெண்டுல்கருக்கு ஓய்வே கிடையாது யுவராஜ்சிங் புகழாரம்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் 47 வயதான சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தனது 200-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக களம் இறங்கிய தெண்டுல்கர் 74 ரன்கள் எடுத்து, வெற்றியோடு விடைபெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை இப்போது நினைவு கூர்ந்துள்ள தெண்டுல்கர், ஓய்வு பெற்ற அன்றைய தினம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும், என் அன்பு நண்பர்கள் பிரையன் லாராவும், கிறிஸ் கெய்லும் அழகான இரும்பு டிரம் ஒன்றை பரிசாக வழங்கினர். அவர்களின் அன்புக்கும், என் மீது வைத்துள்ள மரியாதைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பதிவில், சிறப்பு வாய்ந்த அந்த நாளை எப்போதும் மறக்கமாட்டேன். நீங்கள் (தெண்டுல்கர்) விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கலாம். ஆனால் எங்களது இதயத்தில் இருந்து ஒரு போதும் ஓய்வுபெறமாட்டீர்கள். எல்லா காலத்திலும் சிறந்த வீரர் நீங்கள் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு