சென்னை,
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடு களில் நடக்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயராகி வருகின்றனர்.
இந்த நிலையில், 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அதிகாரபூர்வ பாடல் வெளியாகி இருக்கிறது. 'டாய், டாய்' என்ற இந்த பாடலை கொலம்பியாவின் பிரபல பாடகி ஷகீரா, நைஜீரியா பாடகர் புர்னா பாயு டன் இணைந்து வெளியிட்டுள்ளார். 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை யில் ஷகீரா பாடிய வாக்கா, வாக்கா பாடல் உலகமெங்கும் அமோக வர வேற்பு பெற்றது நினைவுகூரத்தக்கது.