கால்பந்து

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: வருமான வரி அணி வெற்றி

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போடிட்யில், வருமான வரி அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ஏ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் சுங்க இலாகா அணி 22-25, 25-17, 25-15, 25-15 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணியை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 25-19, 25-16, 17-25, 25-12 என்ற செட் கணக்கில் சேப்பாக் பிரண்ட்ஸ் அணியை தோற்கடித்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் சுங்க இலாகா-எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் (மாலை 4.30 மணி), வருமான வரி-செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி (மாலை 6 மணி) அணிகள் சந்திக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது