கால்பந்து

பிரீமியர் லீக் கால்பந்து: அர்செணல்-வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொரோனாவால் ஒத்திவைப்பு!

கடந்த வாரத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினத்தந்தி

லண்டன் ,

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து தொடரான பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சில போட்டிகள் கொரோனா தொற்று எதிரொலியால் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடைசியாக, லிவர்பூல்-லீட்ஸ் மற்றும் வோல்வ்ஸ்-வாட்போர்டு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த அர்செணல்-வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்ட்டுள்ள 15-வது போட்டி இதுவாகும்.

வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரெர்ஸ்(வோல்வ்ஸ்) அணியில் போதுமான எண்ணிக்கையில் வீரர்கள் இல்லை என்ற காரணத்தால் இந்த போட்டியை தள்ளி வைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் மாற்று வீரர்கள் போதிய அளவில் இல்லாதாதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் மட்டும் இந்த தொடரில் பங்கேற்கும் 90க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு