image courtesy: twitter/ @ChampionsLeague  
கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அரையிறுதியில் பி.எஸ்.ஜி. அணியை வீழ்த்தி டார்ட்மண்ட் வெற்றி

இந்த ஆட்டத்தில் டார்ட்மண்ட் 1-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தினத்தந்தி

பாரீஸ்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரையிறுதியின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் எம்பாப்பே தலைமையிலான பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணியும், டார்ட்மண்ட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டார்ட்மண்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மேட் ஹூம்மெல்ஸ் ஒரு கோல் அடித்தார். அரையிறுதியின் முதல் சுற்றில் 1-0 என்ற வென்று இருந்த டார்ட்மண்ட் அணி ஒட்டுமொத்தத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி. அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா