கோப்புப்படம்  
கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அரைஇறுதியில் மான்செஸ்டர் சிட்டி

இரு ஆட்டங்களின் முடிவையும் சேர்த்து மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கணக்கில் அரைஇறுதிக்கு முன்னேறியது.

தினத்தந்தி

முனிச்,

68-வது ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து)- பேயர்ன் முனிச் (ஜெர்மனி) இடையிலான கால்இறுதியின் 2-வது சுற்று முனிச் நகரில் நடந்தது.

விறுவிறுப்பான இந்த மோதல் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மான்செஸ்டர் வீரர் எர்லிங் ஹாலன்ட் 57-வது நிமிடத்திலும், பேயர்ன் முனிச் வீரர் ஜோஷூவா கிமிச் பெனால்டி வாய்ப்பில் 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இவ்விரு அணிகள் ஏற்கனவே மோதிய கால்இறுதியின் முதலாவது சுற்றில் மான்செஸ்டர் சிட்டி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இரு ஆட்டங்களின் முடிவையும் சேர்த்து மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கணக்கில் அரைஇறுதிக்கு முன்னேறியது.

அடுத்த மாதம் நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் மிலன்-இன்டர்மிலன் (இத்தாலி), ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)- மான்செஸ்டர் சிட்டி அணிகள் சந்திக்கின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து