சென்னை,
2015-ம் ஆண்டு சென்னையின் எப்.சி. அணியில் இணைந்த 33 வயதான கரன்ஜித்சிங் கூறுகையில், சென்னையின் எப்.சி. குடும்பத்தில் தொடர்ந்து நீடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சீசனில் வீரராக மட்டுமின்றி கோல் கீப்பிங் பயிற்சியாளர் பொறுப்பு எனக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பணிகளையும் சிறப்பாக செய்ய போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என்றார்.