கால்பந்து

சென்னையின் எப்.சி. அணியை விட்டு பிரிந்தார் தலைமை பயிற்சியாளர்

சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தாமஸ் பிர்டாரிச் நேற்று விலகி இருக்கிறார்.

தினத்தந்தி

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பங்கேற்று வரும் சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் சர்வதேச வீரரான 48 வயது தாமஸ் பிர்டாரிச் கடந்த ஆண்டு (2022) நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் சென்னை அணி 8-வது இடத்தையே பிடித்தது. இந்த நிலையில் சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தாமஸ் பிர்டாரிச் நேற்று விலகி இருக்கிறார். இருதரப்பினரும் சுமுகமாக பேசி இந்த முடிவை எடுத்துள்ளனர். தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் விலகி இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கும் சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. சென்னையின் எப்.சி. அணியில் கடந்த 4 ஆண்டுகளாக நடுகள வீரராக ஆடி வந்த தமிழகத்தை சேர்ந்த 30 வயது எட்வின் சிட்னி வான்ஸ்பால் கடந்த வெள்ளிக்கிழமை அணியில் இருந்து ஒதுங்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு