கோப்புப்படம்  
கால்பந்து

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி-அல் அலி ஆட்டம் 'டிரா'

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

தினத்தந்தி

மியாமி,

32 அணிகள் பங்கேற்றுள்ள கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. மியாமியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் அமெரிக்காவின் இன்டர் மியாமி, எகிப்தின் அல்- அலி அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்தில் இருந்து கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் நீயா? நானா? என்று வரிந்து கட்டின. 41-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அல் அலி அணி வீணடித்தது.

64-வது நிமிடத்தில் இன்டர் மியாமி கேப்டன் லயோனல் மெஸ்சி 'பிரீ கிக்' வாய்ப்பில் உதைத்த பந்து மயிரிழையில் நழுவிப்போனது. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து