கால்பந்து

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து: ஜெர்மெனி அணி சாம்பியன்

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் சிலியை வீழ்த்தி ஜெர்மெனி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தினத்தந்தி

மாஸ்கோ,

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா, ஜெர்மெனி, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் பங்குபெற்றன. இத்தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் உலக சாம்பியனான ஜெர்மெனி அணி கோபா அமெரிக்க சாம்பினான சிலியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடங்கிய 20வது நிமிடத்திலேயே ஜெர்மெனியின் லார்ஷ் ஸ்டிண்டில் தனக்கு கிடத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இதன் மூலம் ஜெர்மெனி 1-0 என்று முன்னிலை பெற்றது. அதன் பின்னர் இரு அணிகளுமே வேறு கோல் அடிக்கததால் ஜெர்மெனி அணி வெற்றி பெற்றது. இது ஜெர்மெனி அணியின் முதல் கான்பெடரேஷன் கோப்பை சாம்பியன் பட்டமாகும். கடந்த வெள்ளி கிழமை போலாந்தில் நடைபெற்ற 21 வயதிற்க்கு உட்பட்டோருக்கான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஜெர்மெனி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் ஜெர்மெனியின் ரசிகர்கள் மட்டும் வீரர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற போட்டியில் மெக்ஸிகோவை வீழ்த்தி போர்ச்சுகல் அணி மூன்றாவது இடம் பிடித்தது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை