Image : @CopaAmerica 
கால்பந்து

கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பெரு அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி

தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது

தினத்தந்தி

புளோரிடா,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா - பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது. அர்ஜென்டினா வீரர் லவுட்டாரோ மார்டினஸ் ஆட்டத்தின் 2வது பாதியில் 47வது நிமிடத்திலும் , 86வது நிமிடத்திலும் கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என வெற்றி பெற்றது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து