Image : @CopaAmerica 
கால்பந்து

கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் - கோஸ்டாரிகா ஆட்டம் 'டிரா'

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர்

தினத்தந்தி

டெக்சாஸ்,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிரேசில் - கோஸ்டாரிகா  அணிகள் மோதின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர்.ஆனால் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை .இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என 'டிரா' ஆனது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்