Image Courtesy: AFP  
கால்பந்து

கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அமெரிக்காவை வீழ்த்திய பனாமா அணி

இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

தினத்தந்தி

ஜார்ஜியா,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் பனாமா அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய பனாமா அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து அமெரிக்க வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தை 2-1 என்ற கோல் கணக்கில் பனாமா அணி வென்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்