Image Courtesy: AFP  
கால்பந்து

கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பொலிவியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற உருகுவே

பொலிவியா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதி வரை பலன் கிடைக்கவில்லை.

தினத்தந்தி

டெக்சாஸ்,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் உருகுவே - பொலிவியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட உருகுவே அணி முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 2-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் உருகுவே வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். இரண்டாம் பாதி ஆட்டத்தில் உருகுவே அணி மேலும் 3 கோல்களை அடித்து அசத்தியது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் உருகுவே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பொலிவியா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதி வரை பலன் கிடைக்கவில்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து