துபாய்,
சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில், அல்-நாசர் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றொரு பிரமாண்ட மைல்கல்லை எட்டியுள்ளார். அல்-ஷபாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 100-வது லீக் கோலை பதிவு செய்து அவர் அசத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் அல்-நாசர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அல்-ஷபாப் அணியைத் தோற்கடித்தது. ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில், சாடியோ மானே (Sadio Mané) கொடுத்த துல்லியமான கிராஸை, ரொனால்டோ மிகச்சிறப்பாக ஹெடர் (Header) செய்து கோலாக மாற்றினார்.
இது சவுதி புரோ லீக்கில் ரொனால்டோ அடித்த 100-வது கோலாகும். மேலும், ஒட்டுமொத்த கால்பந்து கெரியரில் இது அவரது 971-வது கோல் ஆகும்.