Image Tweeted By @atkmohunbaganfc 
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏடிகே மோகன் பகான் அணி வீரர் டிமிட்ரி பெட்ராடோஸ் புதிய சாதனை

ஏடிகே மோகன் பகான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தினத்தந்தி

கொச்சி,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணி சார்பில் டிமிட்ரி பெட்ராடோஸ் ஆட்டத்தின் 26, 62 மற்றும் 92 வது நிமிடத்தில் என 3 கோல்களை அடித்து அசத்தினார்.

இவரின் சிறப்பான ஆட்டத்தால் ஏடிகே மோகன் பகான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியின் மூலம் டிமிட்ரி பெட்ராடோஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை டிமிட்ரி பெட்ராடோஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் எந்தவொரு ஆஸ்திரேலிய வீரரும் ஐ.எஸ்.எல் தொடரில் ஒரே போட்டியில் 3 கோல்களை அடித்ததில்லை. தற்போது அந்த சாதனையை டிமிட்ரி பெட்ராடோஸ் படைத்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்