கால்பந்து

ஒலிம்பிக் கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று: 2-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி

ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் 2-வது தகுதிச் சுற்றுக்கு, இந்திய பெண்கள் அணி முன்னேறியது.

தினத்தந்தி

யான்கோன்,

ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் கால்பந்து தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஆசிய மண்டலத்திற்கான தகுதி சுற்றில் சி பிரிவில் அங்கம் வகித்த இந்திய பெண்கள் அணி யான்கோன் நகரில் நேற்று நடந்த மியான்மருக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும் தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடம் பிடித்த இந்திய அணி, தகுதி போட்டியின் 2-வது ரவுண்டுக்கு முதல்முறையாக முன்னேறியது. 2-வது தகுதி சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு