ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றின் 2வது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - செவில்லா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் செவில்லா அணியின்
யூசெப் என் நெசிரி 8வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் செவில்லா அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து லோயிக் படே 47வது நிமிடத்தில் , யூசெப் என் நெசிரி 81வது நிமிடத்தில் கோல் அடித்தனர். பதிலடி கொடுக்க மான்செஸ்டர் அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் ஆட்ட நேர முடிவில் 3--0 என செவில்லா அணி வெற்றி பெற்றது.
மான்செஸ்டர் யுனைடெட் - செவில்லா மோதிய கால்இறுதியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமலையில் முடிந்தது. . இதனால் ஒட்டு மொத்தத்தில் செவில்லா 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது